நெல்லை மாநகராட்சியில் முதல் பெண் அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்
நெல்லை மாநகராட்சி 36 வது வார்டுடில் போட்டியிட அதிமுக கட்சி சார்பில் ஆனந்தி மகாராஜேந்திரன் இன்று வேட்பு மனு தாக்கல்.
திருநெல்வேலி மாநகராட்சியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்த முதல் பெண் அதிமுக கட்சி வேட்பாளர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை நேற்று முன்தினம் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டனர்.
இதனைத்தொடர்ந்து அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா ஆலோசனையின்படி, திருநெல்வேலி மாநகராட்சியில் 36 வது வார்டில் போட்டியிட அதிமுக சார்பில் ஆனந்தி மகாராஜேந்திரன் இன்று பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில் தேர்தல் உதவி அலுவலர் சாந்தியிடம் வேட்புமனுவை வழங்கினார்.
திருநெல்வேலி மாநகராட்சியில் அதிமுக சார்பில் முதல் பெண் வேட்பாளராக மனுதாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
அப்போது தெற்குப் பகுதி கழகச் செயலாளர் திருத்து சின்னதுரை, வட்டக் கழக செயலாளர் அருணா ஜெயசிங், முன்னாள் வட்டக் கழக செயலாளர்கள் மதுரைவீரன், பாலமுருகன், மகளிர் அணி கற்பகவள்ளி மற்றும் ரவி, முனீஸ்வரன், வாகைமணி ஆகியோர் உடனிருந்தனர்.