பாெருநை நெல்லை புத்தக திருவிழா நாளை பிரம்மாண்ட துவக்கம்

பொருநை நெல்லை புத்தகத்திருவிழா மிகப் பிரம்மாண்டமாக நாளை 17ம் தேதி துவங்குகிறது.

Update: 2022-03-16 12:30 GMT

நெல்லை புத்தகத்திருவிழா நாளை துவங்குவைதயாெட்டி அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

திருநெல்வேலியில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு பொருநை நெல்லை புத்தகத்திருவிழா மிகப் பிரம்மாண்டமாக வருகின்ற 17ம் தேதி நாளை துவங்குகிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும் பப்பாசி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நடைபெறவில்லை. இந்நிலையில் 5வது பொருநை நெல்லை புத்தகத்திருவிழா 17 ஆம் தேதி நாளை முதல், 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 17ஆம் தேதி நடைபெறும் துவக்க விழா நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவும், புத்தகத் திருவிழாவை துவக்கி வைக்கிறார். தினமும் காலை 11 மணி முதல், இரவு 9 மணி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. புத்தகத் திருவிழாவிற்கான அரங்குகள் மற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இங்கு விற்பனை செய்யப்படும் புத்தகங்கள் 10 சதவீத தள்ளுபடி விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் தாமிரபரணி ஆற்றங்கரை நாகரீகமான ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை அகழாய்வுகள் குறித்த 3d பொருளை அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. புத்தக வாசிப்பாளர்கள் இடமும், பொது மக்களிடமும், மாணவர்களிடமும் வாசிப்புத் திறனை அதிகரிக்க இந்த புத்தகத்திருவிழா சென்னைக்கு அடுத்தபடியாக மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது. தினமும் மாலை இலக்கியம், கலைநிகழ்ச்சி, கருத்தரங்கம் தொடர்பான நிகழ்வுகள் நடைபெறுகிறது. மேலும் உலக புகழ் பெற்ற திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ- மாணவிகளும் இதனைக் காண்பதற்கு திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News