4வது வார்டு அதிமுக வேட்பாளரை ஆதரித்து தச்சை கணேசராஜா வாக்கு சேகரிப்பு
திருநெல்வேலி 4வது வார்டு அதிமுக வேட்பாளர் ராமலட்சுமியை ஆதரித்து அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்;
நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நெல்லை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் 4-வது வார்டில் போட்டியிடும் ராமலெட்சுமியினை ஆதரித்து திருநெல்வேலி மாவட்ட செயலாளர் தச்சை என்.கணேசராஜா படப்பகுறிச்சி ஊர் பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.
அப்போது கடந்த சட்டமன்ற தேர்தலில் பொய் வாக்குறுதிகளை கொடுத்து நிறைவேற்றத் தவறிய திமுக அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். குறிப்பாக பொங்கல் பரிசு தொகை வழங்காதது, குடும்பத் தலைவிக்கு உதவித்தொகை வழங்காதது, நகை கடன் தள்ளுபடியில் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி வரும் ஆளுங்கட்சி திமுக அரசுக்கு மக்கள் வாக்களிக்க கூடாது. மாற்றாக மீண்டும் அதிமுக அரசு ஆட்சிக்கு வர மக்கள் மாநகராட்சித் தேர்தலில் வாக்களித்து திமுக அரசுக்கு புத்தி புகட்ட வேண்டும் என்று அதிமுக மாவட்டச் செயலாளர் தச்சை-கணேசராஜா கேட்டுக்கொண்டார்.
வாக்கு சேகரிப்பின் போது அவைத் தலைவர் பாலுஉடையார், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் சண்முகவேல் பாண்டியன், வட்டச் செயலாளர் செல்லையா, மாரியப்பன், மோகன்குமார், ஆறுமுகம், முத்து, செந்தில் பாண்டி, ஆனந்தகுமார், சாந்தி, அலெக்ஸ் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.