நெல்லையில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Update: 2021-10-16 08:29 GMT

நெல்லையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம். வீரமாணிக்கபுரம் நவஜீவன் டிரஸ்டில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மைக்கில் ஜார்ஜ் கமலேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செ.பால்ராஜ் அனைவரையும் வரவேற்று பேசியதுடன் மதுரையில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்ட முடிவுகளை விளக்கி கூறினார்.

பொதுக்குழு கூட்டத்தில் காலியாக உள்ள மாநில செயற்குழு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலை தூத்துக்குடி மாவட்ட செயலாளர் செல்வராஜ் தேர்தல் ஆணையராகவும், தூத்துக்குடி மாநில செயற்குழு உறுப்பினர் ஆண்டனி சார்லஸ் தேர்தல் துணை ஆணையாளர் ஆகவும் கலந்துகொண்டு தேர்தலை நடத்தினர். தேர்தல் முடிவில் மாநில செயற்குழு உறுப்பினராக அண்ணாதுரையும், திருநெல்வேலி கல்வி மாவட்ட தலைவராக உமையொரு பாகமும், மாவட்ட துணைச் செயலாளராக அகஸ்டின் ஆகியோர் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இப்பொதுகுழுவில் கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட துணைப் பொறுப்பாளர்கள், வட்டார தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர். திருநெல்வேலி மாவட்டத்திற்கான மேலிட பொறுப்பாளரான மாநில துணைத் தலைவர் கன்னியாகுமரி சேவியர், மாநில தலைவர் மணிமேகலை ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இப்பொதுகுழுவில் மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆசிரியர்களுக்கும் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு நடத்துவது போன்று ஆசிரியர்களுக்கும் பூஜ்ஜிய கலந்தாய்வு நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக நாளிதழ்கள் மற்றும் சமூக வலைதளங்களில் ஊடகங்களில் செய்திகள் உலா வருகின்றன.

மாணவர்களோடு நேரடி தொடர்புடைய ஆசிரியர்களுக்கு அதிகாரிகளை போன்று பூஜ்ஜிய கலந்தாய்வு நடத்துவது பல்வேறு நடைமுறை சிக்கலை உருவாக்கும் என்பதால் விருப்பமுள்ள ஆசிரியர்களுக்கு மட்டும் கடந்த காலங்களைப் போன்று மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பத்தை பெற்று விருப்ப மாறுதல் கலந்தாய்வை பள்ளி திறக்கும் நவம்பர் 1 ஆம் தேதிக்கு முன்பாக நடத்த வேண்டுமென இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

நவம்பர் 1 ம் தேதி ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளை முழுமையாக திறப்பதற்கு தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மனதார வரவேற்கிறது. அதேசமயம் பள்ளிகளை சுத்தம் செய்வது சார்பாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதற்கு உரிய நிதி வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டுமென இம்மாவட்ட பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற திருநெல்வேலி நகர் வட்டாரத்தில் பணிபுரியும் சங்கரன் ஆசிரியருக்கு இப்பொதுகுழுவில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட கிளைக்கு கட்டடம் கட்ட இடம் வழங்கிய மாவட்ட துணை தலைவர் வெனிஸ் ராஜ் இக்னேஷியஸ்க்கு பொதுக்குழுவில் பாராட்டு தெரிவித்து கெளரவிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட அமைப்பிற்கு சொந்தமாக கட்டடம் கட்டுவதற்கு இயக்க உறுப்பினர்கள் மற்றும் ஆர்வமுள்ள ஆசிரியர்களிடம் இருந்து நன்கொடை பெற்று ஓராண்டு காலத்திற்குள் கட்டிடம் கட்டி முடிப்பது என தீர்மானிக்கப்பட்டது. ஆசிரியர்களின் நலன் காக்கும் கேடயமாகவும், உரிமையை பெற்றுத் தரும் ஈட்டி முனையாகவும் செயல்படும் நமது கூட்டணி இதழான ஆசிரியர் கேடயத்திற்கு இயக்க புரவலராக 100 உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிறைவாக மாவட்ட பொருளாளர் அமுதா நன்றி கூறினார்.

Tags:    

Similar News