தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம்: புதிய மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு

நெல்லையில் தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம் முதன் முதலாக மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் அறிமுக விழா நடந்தது

Update: 2022-01-30 16:15 GMT

நெல்லையில் தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம் மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது

நெல்லையில் தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம் மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம் என்ற பெயரில் புதிய சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மாநில தலைவராக வழக்கறிஞர் செந்தில்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த சங்கத்தின் கிளைகள் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து நெல்லையில் முதன்முதலாக மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் அறிமுக விழா புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. மண்டலத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். மாநில இளைய தொழில் முனைவோர் பிரிவுத் தலைவர் முனைவர் தமிழ் தாசன், மாவட்டத் தலைவர் ஆர்.இப்ராஹிம், மாவட்ட செயலர் சி.வீரமணிகண்டன், பொருளாளர் டி .நாகராஜன், மாவட்ட மகளிரணி தலைவி நந்தினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கான நியமனக் கடிதத்தை மண்டலத் தலைவர் ஐ.கண்ணன் வழங்கினார் . இதில் அனைத்து பிரிவு நிர்வாகிகளும் பதவியேற்றுக் கொண்டனர். விழாவில் பட்டிமன்ற நடுவர் ராஜநிதி, வெளிச்சம், இமயம், தமிழன் டி .வி. நிகழ்ச்சி இயக்குனர் புருஷோத்தமன், மகளிரணி அனு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News