நெல்லையில் நிலைக்காட்சி மூலம் தத்ரூபமாக விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகள்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, சாலை விபத்து குறித்து தத்ரூபமாக நிலை காட்சி மூலம் மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2022-03-30 10:14 GMT

நெல்லையில் மாணவிகள் நிலைக்காட்சி மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

இன்றைய இளைய தலைமுறையினர் எதிர்மறை சீர்கேடு. குழந்தைகளை தவறான முறையில் கையாளுதல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் போன்றவற்றை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெல்லையில் தூய இன்னாசியார் கல்வியியல் கல்லூரி மாணவிகளின் நிலை காட்சி நிகழ்வு நடைபெற்றது. இதில் 170க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிலை காட்சியை ஏராளமான பள்ளி மாணவ- மாணவிகள் கண்டுகளித்தனர். இன்றைய அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக நம் நாட்டில் பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம், கல்வி தொழில், பொருளாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் அதிக வேகமாக முன்னேற்றமும், சமுதாய முன்னேற்றமும் காணமுடிகிறது. இத்தகைய மாற்றம் இருந்தபோதிலும் அன்றைய கிராமமும் இன்றைய நகரமும், சாலை விபத்துக்கள், இன்றைய இளைய தலைமுறையின் எதிர்மறை சீர்கேடு, குழந்தைகளை தவறான முறையில் கையாளுதல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை போன்ற நிகழ்வுகளை இன்றைய சமூகத்தில் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

இந்த நிகழ்வுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் அதற்கான தீர்வுகளை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ஒரு தனியார் கல்வியியல் கல்லூரியில் நிலை காட்சி நிகழ்வு இன்று நடத்தப்பட்டது.

இந்த நிலை காட்சியில் குழந்தை திருமணம், முறையற்ற முறையில் பிறந்த குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசுவது, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் உள்ளிட்டவைகளை மாணவ- மாணவிகள் குழுவாக நிலை காட்சியாக செய்திருந்தனர்.

மேலும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காமல் ஏற்படும் விபத்து தொடர்பாக மாணவிகள் தத்துரூபமாக சாலையில் விபத்து நடைபெற்றது போலவே செய்திருந்தனர்.

இதனை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளும், பொதுமக்களும் கண்டு களித்தனர். இது குறித்து மாணவி கூறும்போது- எங்கள் கல்லூரியில் ஆண்டுதோறும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏதாவது நிலை காட்சியை செய்து வருவோம். அதன்படி இன்று நாங்கள் சாலை விதிகளை மதிக்க வில்லை என்றால் ஏற்படும் விபத்து தொடர்பாக செய்திருந்தோம். பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை மதிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் விபத்து ஏற்படும். நம்மால் பிறரும் உயிரிழப்பிற்கு ஆளாகி விடுவார்கள் என தெரிவித்தார்.

நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் இந்த நிலைக் காட்சியை நேரில் பார்வையிட்டு மாணவிகளை பாராட்டினார்.கடுமையான சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இந்த நிலை காட்சியை தத்துரூபமாக கல்வியல் மாணவிகள் நடித்துக் காட்டினர்.

Tags:    

Similar News