நெல்லை ஆட்சியரிடம் மாடுகளுடன் மனு கொடுத்த எஸ்டிபிஐ கட்சியினர்

நெல்லை மேலப்பாளையம் சந்தையில் மாடுகளுக்கு நுழைவு கட்டணம் அதிகரிப்பு குறைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

Update: 2021-10-11 17:17 GMT

நெல்லையில் மாடுகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்.

மேலப்பாளையம் கால்நடைகள் சந்தை நுழைவு கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி மாவட்ட ஆட்சியர் இடம் மனு கொடுக்க எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் மேலப்பாளையம் அனைத்து மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கத்தினர் மாடுகளுடன் வந்தனர்.

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கால்நடைசந்தை தமிழகத்தில் புகழ்பெற்ற கால்நடைச் சந்தைகளில் ஒன்றாகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குத்தகைதாரர் மூலம் நடத்தப்பட்ட சந்தையில் மாடு ஒன்றுக்கு 40 ரூபாயும், 60 ரூபாய் என்றும் வசூலித்தார்கள். தற்போது மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் நேரடியாக நடைபெற்று வருகின்றது.

மாடு ஒன்றுக்கு ரூபாய் 40 வசூலித்து வந்த நிலையில் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் மாடு ஒன்றிற்கு 100ருபாய் என்றும், ஆடு ஒன்றுக்கு 50 என்றும் கட்டணம் நிர்ணயித்து வசூலித்து வருகிறார்கள். இந்த அதிக கட்டணம் உயர்வு வியாபாரிகளை பெரிதும் பாதிக்கும். அதுமட்டுமல்லாமல் கொரானா பெரும் தொற்று உள்ள இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இந்த கட்டண உயர்வை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு திரும்பப் பெறவேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது.

அப்போது எஸ்டிபிஐ கட்சி மாநகர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, மாவட்ட துணைத்தலைவர் கனி, பொதுச் செயலாளர் ஹயாத் முகம்மது, பொருளாளர் வழக்கறிஞர் ஆரிப் பாட்ஷா, பாளை தொகுதி செயலாளர் சிந்தா, மேலப்பாளையம் அனைத்து மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், சுப்புபாண்டியன், முன்னா முகம்மது, ஹைதர்இமாம் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News