நெல்லையில் எஸ்டிபிஐ கட்சியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி செயற்குழு கூட்டம்

மழை காலங்களில் மழைநீர் தேங்காதவாறு வாறுகால் முழுமையாக தூர்வார நடவடிக்கை எடுக்க கோரி எஸ்டிபிஐ கட்சி கூட்டத்தில் தீர்மானம்.

Update: 2021-10-16 08:35 GMT

எஸ்டிபிஐ கட்சி நெல்லை மாநகர் மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

மழை காலம் நெருங்குவதால் நோய் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். எஸ்டிபிஐ கட்சி நெல்லை மாநகர் மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.மாவட்ட தலைவர் கா.பக்கீர் முகம்மது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளர் காதர் மீரான் வரவேற்புரை ஆற்றினார்.

சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் எஸ்.எஸ்.எ. கனி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளராக ஒ.எம்.எஸ். மீரான்,  மாவட்ட பொருளாளராக அப்துல் வதூத் , மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக சுத்தமல்லி ஐய்யூப், டவுண் பாரூக், தாழையூத்து உசேன், மானூர் அன்சாரி, கேடிசி நகர் பீர், பர்கிட் மாநகரம் மைதீன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர் 

செயற்குழு கூட்டத்தில் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விளைநிலங்களில் வீட்டுமனை வாங்குவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மழை காலம் நெருங்குவதால் நோய் தடுப்பு நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். மழை காலங்களில் மழைநீர் தேங்காத வண்ணம் வாறுகால் அனைத்தும் முழுமையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக மாவட்ட பொருளாளர் அப்துல் வதூத் நன்றி உரை ஆற்றினார்.

Tags:    

Similar News