நெல்லையில் தாக்கப்பட்ட பெண் எஸ்ஐ.,க்கு எஸ்டிபிஐ கட்சியினர் ஆறுதல்

நெல்லையில் கத்தியால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் பெண் உதவி ஆய்வாளரை எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

Update: 2022-04-25 11:56 GMT

நெல்லையில் கத்தியால் குத்தப்பட்ட பெண் எஸ்.ஐயை‌ எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

நெல்லையில் கத்தியால் குத்தப்பட்ட பெண் எஸ்.ஐயை‌ எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர் அருகே கோவில் கொடை விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் மார்க்ரேட் கிரேஸ் கத்தி குத்தில் படுகாயமடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார்.

சிகிச்சை பெற்று வரும் பெண் எஸ்ஐயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போனில் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். மேலும் அமைச்சர், போலீஸ் உயர் அதிகாரிகள் நேரில் பார்த்து ஆறுதல் அளித்து வந்தனர். இந்நிலையில் இன்று எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் பர்கிட் அலாவுதீன் தலைமையில் நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் நிர்வாகிகள் பார்வையிட்டு நலம் விசாரித்தனர்.

சந்திப்பின் போது விமன் இந்தியா மூமென்ட் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் மஹ்மூதா ரினோஷா ஆலிமா, வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் சிட்டி சேக், செயலாளர் பர்கிட் சேக், எஸ்டிடியு உடல் உழைப்பு தொழிலாளர் சங்க தலைவர் கல்வத், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் பர்கிட் யாசின், துணை தலைவர் அப்துல் மஜீத், பாளை தொகுதி செயலாளர் சிந்தா , துணை தலைவர் அரசன் சேக், சுத்தமல்லி பகுதி தலைவர் பயாஸ் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News