முடிதிருத்தும் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
ஊரடங்கில் முடிதிருத்தும் தொழிலுக்கு விதிக்கப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்ய மாவட்ட ஆட்சியரிடம் மனு;
நெல்லை வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி சார்பில் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில்,
தற்போதைய கொரோனா காலகட்டத்தில் சலூன் கடை வைத்து தொழில் செய்து வருகிறோம். தற்போது அரசின் ஊரடங்கு அறிவிப்பால் தொழில் செய்ய முடியாமல் மேலும் வறுமையில் வாடுவோம்.
எனவே, எங்கள் வாழ்வாதாரம் பாதிக்காமல், உடனடியாக அரசு மறுபரிசீலனை செய்து எங்களது முடிதிருத்தும் தொழிலை நேர கட்டுப்பாட்டுடன் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டுகிறோம் , என்ற மனுவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அளித்தனர்.