ஊரக உள்ளாட்சி தேர்தல்: நெல்லையில் 2வது நாளாக 215 பேர் வேட்பு மனு தாக்கல்
நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு இரண்டாவது நாளாக மொத்தம் 215 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு இரண்டாவது நாளாக மொத்தம் 215 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 ஊராட்சி ஒன்றியங்களில் நடக்கிறது. முதல் கட்டமாக அக்டோபர் 6-ந்தேதி அம்பாசமுத்திரம் , சேரன்மகாதேவி, மானூர், பாளையங்கோட்டை மற்றும் பாப்பாக்குடி ஆகிய 5 ஒன்றியங்களிலும், இரண்டாவது கட்டமாக அக்டோபர் 9-ந்தேதி களக்காடு, நான்குநேரி , ராதாபுரம், மற்றும் வள்ளியூர் ஆகிய 4 ஒன்றியங்களிலும் தேர்தல் நடக்கிறது.
9 ஒன்றியங்களிலும் மொத்தம் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர் பதவி மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் என 2069 பதவியிடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக பாளையங்கோட்டை மானூர் உள்ளிட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் ஏராளமானவர்கள் மனு தாக்கல் செய்தனர்.
இன்றைய நிலவரப்படி ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கு 3 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 45 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 133 பேரும் என மொத்தம் 215 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு இதுவரை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை .