நெல்லை ஆயுதப்படையில் மதநல்லிணக்க தீபாவளி: பாேலீஸ் கமிஷனர் பங்கேற்பு

பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக ஆதரவற்றவர்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.;

Update: 2021-10-25 11:36 GMT

பாளையங்கோட்டையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக ஆதரவற்றவர்களுக்கு உதவிகள் மற்றும் உணவுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில்  மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக ஆதரவற்றவர்களுக்கு உதவிகள் மற்றும் உணவுகள் வழங்கும் நிகழ்ச்சியில் மாநகர ஆணையாளர் செந்தாமரைக்கண்ணன் கலந்து கொண்டார்.

நெல்லை மாநகரம் சட்டம்/ஒழுங்கு காவல்துறை ஆணையாளர் வழிகாட்டுதல் மற்றும் ஏற்பாட்டின் பேரில் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வைத்து இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய நல்லிணக்கத்தை போற்றும் விதமாக தீபாவளி பண்டிகை விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் 17 ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அறுசுவை பிரியாணி மஸ்ஜிதுர் ரஹீம் ஜும்ஆ பள்ளியில் கொடை வள்ளல் கே.எம்.ஏ நிஜாம் தயாரித்து வழங்கினார். மேலும் சைவ உணவு ஆயிரம் நபர்களுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நெல்லை மாநகர கமிஷனர் செந்தாமரைக் கண்ணன் ஆயிரம் பேருக்கு உணவு வழங்கிய கே.எம்.ஏ நிஜாமுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் சுரேஷ்குமார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News