குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீர்: அதிமுகவினர் மாநகராட்சி ஆணையரிடம் மனு

அண்ணாநகர் 36-வது வார்டு பகுதியில் குடியிருப்புகளை சுற்றியுள்ள மழைநீரை போர்க்கால அடிப்படையில் அகற்றக் கோரி அதிமுக சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2021-12-01 12:13 GMT

பாளையங்கோட்டை அண்ணா நகர் 36-வது வார்டு குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்றகோரி அதிமுக சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

பாளையங்கோட்டை அண்ணா நகர் 36-வது வார்டு குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்றகோரி அதிமுக சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

நெல்லை அதிமுக மாவட்ட கழக செயலாளரும், நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவருமான தச்சை-கணேசராஜா ஆலோசனையின் பேரில், பாளையங்கோட்டை தெற்கு பகுதி கழக செயலாளர் திருத்து சின்னத்துரை தலைமையில், வட்ட பொறுப்பாளர் சரவணன் ஏற்பாட்டில் பாளையங்கோட்டை 36 வது வார்டு அண்ணா நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கி பொதுமக்களுக்கும். போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அப்பகுதியில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மழைநீரை அகற்றும் படி மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரனிடம் மனு அளிக்கப்பட்டது. அப்போது தச்சை தெற்கு பகுதி கழக செயலாளர் சிந்து முருகன், நெல்லை மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் அம்மா தி கிரேட் சிவந்தி மகாராஜேந்திரன், ஆனந்தி மகாராஜேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News