நெல்லை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட திரண்ட மக்கள்

திருநெல்வேலி - 13 லட்சத்து 93 ஆயிரம் பேருக்கு போட வேண்டிய சூழ்நிலை உள்ளது. தினசரி 5,000 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Update: 2021-06-12 05:32 GMT

நெல்லை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட திரண்ட மக்கள்

நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் ஒரு வாரத்திற்கு பின்பு இன்று தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட உள்ளதால் மக்கள் அதிகமாக குவிந்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்துக்கு 7800 கோவிஷீல்டு, 1000 கோவாக்சின் தடுப்பூசிகள் மட்டுமே வந்துள்ள நிலையில் தடுப்பூசி போட காலை முதல் பொதுமக்கள் மையங்களில் ஆர்வமுடன் குவிந்துள்ளனர். குறிப்பாக பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள மையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.

ஆனால் நெல்லை மாவட்டத்தில் 13 லட்சத்து 93 ஆயிரம் பேருக்கு இன்னும் போட வேண்டிய சூழ்நிலை உள்ளது.தினசரி 5,000 பேருக்கு தடுப்பூசி போடுவதற்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில் தடுப்பூசி மருந்து குறைவாக உள்ளதால் தட்டுப்பாடு இருப்பது தெரியவந்துள்ளது. கூட்டம் அதிகரித்து வரும் சூழலில் அனைவருக்கும் தடுப்பூசி போட முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Tags:    

Similar News