திருநெல்வேலியில் கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக போக்குவரத்து காவலர்களுக்கு சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் மாஸ்க், கையுறை, சானிடைசர் போன்றவைகளை வழங்கினார்.
திருநெல்வேலி மாநகர பகுதிகளில் மழை வெயில் என்று பாராமல் பொது இடங்களில் நின்று பணிபுரியும் போக்குவரத்து காவலர்கள் கொரோனா நோய் தாக்கத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற முன்னெச்சரிக்கையாக போக்குவரத்து ஆண், பெண் காவலர்கள் அனைவருக்கும் திருநெல்வேலி மாநகர சட்டம் -ஒழுங்கு துணை ஆணையர் மகேஷ்குமார் மறுசுழற்சி செய்யும் கையுறை, மாஸ்க் மற்றும் சானிடைசர் உள்ளிட்ட பொருட்களை வழங்கி, அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.தொடர்ந்து அனைத்து போக்குவரத்து காவலர்களுக்கும் நீர்மோர் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி செய்திருந்தார்.