காவல் துறையில் பணியின்போது வீரமரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி

பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் பணியின்போது வீரமரணம் அடைந்தவர்களுக்கு 54 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது

Update: 2021-10-21 08:32 GMT

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி காவல்துறையில் பணி புரிந்து வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் திருநெல்வேலி மாநகர் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் காவல் துறையில் பணிபுரிந்து வீரமரணம் அடைந்தோருக்கு  நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு உள்ள நினைவு தூணில் நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் செந்தாமரைக்கண்ணன், நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநவ், திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன், நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சுரேஷ்குமார், நெல்லை மாநகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் சுரேஷ்குமார் மற்றும் நெல்லை மாநகர உதவி ஆணையர்கள் மற்றும் காவல் துறை ஆய்வாளர்கள் உள்பட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து 18 காவலர்கள் மூன்று முறை வானத்தை நோக்கி சுட்டு 54 குண்டுகள் முழங்க வீரமரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இதில் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News