பாளை. சதக்கத்துல்லாஹ் கல்லூரியில் அறிவியல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்த பயிலரங்கு

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் கல்லூரியில் கிராமப்புறப் பகுதிகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாடு குறித்த பயிலரங்கு.

Update: 2022-01-03 14:53 GMT

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜோஸிடால் அலெக்ஸ் தொடக்க உரையாற்றுகிறார்.

கிராமப்புறப் பகுதிகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்த பயிலரங்கு நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் முதுநிலை ஆய்வுக் கணினித் துறையும் இணைந்து கிராமப்புறப் பகுதிகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு எனும் தலைப்பில் ஜனவரி 03 பயிலரங்கு தொடங்கியது. இதில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணி துறை- அங்கன்வாடி பணியாளர்கள் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சான்றிதழ் பெற்றனர்.

இன்று நடைபெற்ற தொடக்க விழாவில் முதுநிலை கணினி அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையின் உதவிப்பேராசிரியரும், தலைவருமான முனைவர் எஸ்.ஷாஜுன் நிஷா வரவேற்றுப் பேசினார். கல்லூரி முதல்வர் முனைவர் மு.முஹம்மது சாதிக் தலைமையுரையாற்றினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜோஸிடால் அலெக்ஸ் தொடக்க உரையாற்றினார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் எஸ்.எம்.ஏ.செய்யது முகமது காஜா வாழ்த்துரை வழங்கினார். உதவிப்பேராசிரியர் க.கணேஷ்குமார் நன்றியுரை நல்கினார்.

முதல் நாள் பயிற்சி முகாமில் ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைத்துறையின் உதவிப்பேராசிரியரும், தலைவருமான ஆர்.சொர்ண லெட்சுமி காய்கறிகள், பழங்களைப் பதப்படுத்தும் முறை மற்றும் அடுமனை செயல்முறை பயிற்சி அளித்தார்.

Tags:    

Similar News