நெல்லை: சிறிய தெருக்களில் குப்பைகளை அகற்ற மாநகராட்சி பணியாளர்களுக்கு தள்ளு வண்டி
நெல்லை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய தெருக்களில் குப்பைகளை தரம் பிரித்து அகற்ற பணியாளர்களுக்கு தள்ளு வண்டி வழங்கப்பட்டது.
நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் உத்தரவு படி மாநகராட்சி பகுதிகளில் சிறிய தெருக்களில் குப்பைகளை தரம் பிரித்து அகற்ற பணியாளர்களுக்கு தள்ளு வண்டிகள் வழங்கப்பட்டது.
மேலப்பாளையம் மண்டலத்தில் மாநகர நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் தலைமையில் உதவி ஆணையாளர் (பொ) லெனின், சுகாதார அலுவலர் ஷாகுல் ஹமீது, சுகாதார ஆய்வாளர்கள் நடராஜன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் முதல் கட்டமாக 17 தள்ளு வண்டிகளை மேலப்பாளையம் மண்டல பகுதிகளில் உள்ள சிறிய தெருக்களில் உருவாகும் குப்பைகளை பிரித்து வாங்குவதற்கு பணியாளர்களிடம் வழங்கினார்கள்.