நெல்லை: டாஸ்மாக் பார் ஏல தகராறில் திமுக வட்ட செயலாளர் வெட்டிக்கொலை
டாஸ்மாக் பார் எடுப்பது தொடர்பான பிரச்சனையில் நெல்லையில் திமுக வட்ட செயலாளர் இரவில் வெட்டிக்கொலை.;
மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட திமுக பிரமுகர் அபே மணி.
நெல்லையில் டாஸ்மார்க் பார் எடுப்பதில் பிரச்சனையாக திமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாநகர 38வது வார்டு திமுக செயலாளராக இருப்பவர் பொன்னு தாஸ் என்ற அபே மணி 32. இவர் அபே ஆட்டோ ஒர்க் ஷாப் நடத்தி வந்தார். இவரது வீடு பாளையங்கோட்டை பகுதியில் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது சுமார் இரவு 11 மணியளவில் தெற்கு பஜார் யாதவர் உச்சிமாகாளி அம்மன் கோவில் முன்பாக மர்ம கும்பல் மணியை சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
பாளையங்கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த இடம் பாளையங்கோட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு மிக அருகாமையில் உள்ளது.
டாஸ்மாக் மதுபானக் கடை ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் வெட்டிக்கொலை என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவருகிறது. இதுதொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.