நெல்லையில் மாவட்ட கலை மன்றம் தாெடக்க விழா: சபாநாயகர், அமைச்சர் பங்கேற்பு
நெல்லையில் மாவட்ட கலை மன்றத்தின் முதல் கலை நிகழ்ச்சியை சபாநாயகர் மு.அப்பாவு, அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தனர்.
திருநெல்வேலி மாவட்டக் கலை மன்றத்தின் முதல் கலை நிகழ்ச்சியை தமிழ்நாடு சட்டப்பேரவைத்தலைவர் மு.அப்பாவு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தின் மன்றம் தொடக்க விழா பாளையங்கோட்டை அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை தமிழ்நாடு சட்டப்பேரவைத்தலைவர் மு.அப்பாவு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தொடங்கி வைத்து காணியின மக்களின் வாழ்வியல் குறித்த குறும்படத்தின் முன்னோட்டத்தினை வெளியிட்டனர். தொடர்ந்து திருநெல்வேலி, நீர், நிலம், மனிதர்கள் என்ற நூலினையும் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப் முன்னிலையில் வெளியிட்டனர்.
பழந்தமிழர்களின் வாழ்வில் மக்களின் வாழ்வோடு கலந்து தமிழ் பண்பாட்டின் கூறுகளை வீரியத்தோடு வெளிப்படுத்தும் நாட்டார்கலைகள், மரபு வழியாகவும் வட்டாரத்தன்மை கொண்டவையாகவும் பல நூறுக் கலைகளை உள்ளடக்கி வாழ்ந்து வந்தார்கள். தற்போது பல கலைகள் மறைந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது வாழ்ந்து வரும் கலைகளையாவது பாதுகாத்திடும் நோக்கிலும் வருங்கால இளையோர் அறிந்து கொள்ளும் வகையிலும் தமிழ்நாடு மூலமாக பண்பாட்டுத்துறையின் மூலம் தமிழக இளைஞர்களிடம், சிற்பம், ஓவியம், இசை போன்ற கலைகளை, கொண்டு செல்லும் விதத்தில் நான்கு இசைக்கல்லூரிகளும், இரண்டு ஓவியக் கல்லூரியும், ஒரு சிற்பக் கல்லூரியும் இத்துறை மூலமாக செயல்பட்டு வருவதோடு, நாட்டுப்புறக் கலைகளை பாதுகாத்திடும் நோக்கில் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம் அமைத்து அனைத்து கிராமியக் கலைஞர்களையும் ஒன்றினைத்து அதன் மூலமாக அரசின் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் கலைஞர்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளும் வழங்கி வாழ்வாதாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசின் கலை உயர திருநெல்வேலி மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மாவட்ட கலை மன்றம் இன்று முதல் புது பொலிவு பெற்று இனிதே இன்று மீண்டும் துவங்கப்பட்டு நமது மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கலைகளுக்கும் வாய்ப்புகள் அளிக்கப்பட்டு, அக்கலைகளில் ஈடுபட்டு வரும் கலைஞர்களுக்கு மாவட்ட கலைமன்றம் மூலமாக ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகளிலும் முன்னுரிமை அளிக்கப்பட்டு கெளரவிக்கப்படுவார்கள்.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் எருது கட்டு மேளம் கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. பழங்காலத்தில் எருதுகட்டுக்கு மட்டுமே நிகழ்த்தப்பட்ட இக்கலை தற்போது கோவில்களில் நடைபெறும் பொங்கல் விழா, ஊர்வலங்களிலும், கோவில் கொடை விழாக்களிலும், தற்போது இக்கலையை பாதுகாத்திடும் நோக்கில் அரசு நிகழ்ச்சிகளிலும் நிகழ்த்தப்பட்டு வருகிறது. மேலும் பரதவர் களியல் நெல்லை மாவட்டத்தின் உவரியில் இக்கலை தற்போது நிகழ்த்தப்பட்டு வருகிறது. இக்கலையினை கோவில் திருவிழாக்கள், சமய விழாக்ககள் புது மனை புகுவிழா, பூப்புனித நீராட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் இவ்வாட்டம் ஆடப்படுகிறது. களியலாட்டத்தில் "பரதவர் களியல்" நெல்லை மாவட்டம் உவரியில் மட்டுமே தற்போது நிகழ்த்தப்படுகிறது. இந்நாட்டுப்புற நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
மேலும் திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் வாழ்ந்து வரும் காணியின மக்களின் வாழ்க்கை முறையை வெளிபடுத்தும் வகையில் குறும்படம் வெளியிடுவதற்கான முன்னோட்டம் வெளியிடப்பட்டது. தொடர்ந்து திருநெல்வேலி நீர், நிலம், மனிதர்கள் என்னும் தலைப்பில் எழுத்தாளர் நாறும்புநாதன் எழுதிய நூலினை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட, தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் மு.அப்பாவு பெற்றக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற கிராமிய கலைஞர்கள் அனைவருக்கும் பொன்னாடை போற்றி கௌவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.பெருமாள், துணை ஆட்சியர்(பயிற்சி) மகாலட்சுமி, வட்டாட்சியர் செல்வன், ஆவடையப்பன், காப்பாட்சியர் சிவசக்தி வள்ளி, கலை பாண்பாட்டு துறை உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.