நெல்லை: பேராத்துசெல்வி அம்பாள் கோவிலில் ஐயப்ப பக்தர்களின் பூக்குழி திருவிழா

பேராத்து செல்வி அம்பாள் கோவிலில் ஐயப்ப பக்தர்களின் பூக்குழி திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.

Update: 2021-12-21 02:14 GMT

வண்ணார்பேட்டை ஸ்ரீ பேராத்து செல்வி அம்பாள் திருக்கோவிலில் ஐயப்ப பக்தர்களின் பூக்குழி திருவிழா நடைபெற்றது 

நெல்லை வண்ணார்பேட்டை தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ பேராத்து செல்வி அம்பாள் திருக்கோவிலில் ஐயப்ப பக்தர்களின் பூக்குழி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு செய்தனர்.

நெல்லை மாநகரில் வண்ணார்பேட்டை தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ பேராத்து செல்வி அம்பாள் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் சபரிமலை செல்லும் பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு நடத்துவது மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். பாலசாஸ்தா ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பில் 22ம் ஆண்டாக பூக்குழி இறங்கும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஐயப்ப சுவாமி பக்தர்கள் விரதமிருந்து பூக்குழி இறங்குவார்கள்.

இந்த விழாவை முன்னிட்டு ஸ்ரீ பேராத்து செல்வி அம்பாள் கோவிலில் சஹஸ்ரநாமம் பாராயணம், புஷ்பாஞ்சலி அம்பாளுக்கு நடைபெற்றன. மாலையில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி ஐயப்பர் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து விரதமிருந்து பூக்குழி இறங்கும் பக்தர்கள் கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த 30 அடி பூக்குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் அலகு குத்தி கொண்டும் சரண கோஷத்துடன் பூக்குழி இறங்கினர். இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News