காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நெல்லையில் கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கதர் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம். இந்த ஆண்டு 41 லட்சம் விற்பனை இலக்கு.
காந்தியடிகள் 153 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கவிழா. தீபாவளியையொட்டி 41 லட்சம் விற்பனை இலக்கு.
தேசத்தந்தை அண்ணல் காந்தியடிகளின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள கதர் விற்பனை நிலையத்தில் காந்தியடிகள் பிறந்த நாள் விழா மற்றும் தீபாவளி கதர் முதல் சிறப்பு விற்பனையை இன்று நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கதர் கிராம தொழில்கள் உதவி இயக்குனர் சுதாகர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்டத்தில் கதர் விற்பனை கடந்த ஆண்டு 40 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 25.96 லட்சம் விற்பனை ஆனது. கிராமப் பொருட்கள் விற்பனை 35.40 லட்சம் விற்பனை செய்யப்பட்டது.
இந்த ஆண்டு விற்பனையை பொருத்தளவில் 41 லட்சம் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகளின் உதவி பெற்ற கதர் மற்றும் பாலிவஸ்திரா ரகங்களுக்கு 30 சதவீதமும், உல்லன் ரகங்களுக்கு 20 சதவீத சிறப்புத் தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. நிகழ்ச்சியில் கதர் விற்பனை நிலைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.