பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி கோவிலில் கார்த்திகை தீப விழா
பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தென்மாவட்டங்களில் பழமைவாய்ந்த வைணவ ஸ்தலங்களில் ஒன்றான நெல்லை பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், அதனைத் தொடர்ந்து உற்சவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.
நேற்று மாலையில் சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி, தோளுக்கினியானில் எழுந்தருளி திருமங்கை ஆழ்வார் பிரபந்த பாராயணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருக்கோவில் பிரகாரம் முழுவதும், 1008 திருவிளக்குகள் கொண்டு தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் தோளுக்கினியான் பல்லக்கில் கார்த்திகை தீபத்தை உடன் ராஜகோபாலசுவாமி வீதி உலா வந்து, கோவில் முன்பு அமைக்கப்பட்ட சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து ராஜகோபால சுவாமிக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.