ஜெயலலிதா பிறந்தநாள் விழா: நெல்லையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி நெல்லை மாவட்ட அதிமுக சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.;

Update: 2022-02-24 08:00 GMT

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சி. நெல்லையில் அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்.

இதய தெய்வம் புரட்சித்தலைவி, முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நெல்லை கொக்கிரகுளத்தில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு திருநெல்வேலி மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளர் தச்சை- என்.கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் போது கழக அமைப்பு செயலாளர் சுதா கே பரமசிவம், கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் ஜெகநாதன், கழக எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் செளந்தராஜன், மாவட்ட கழக துணை செயலாளர் கவிதா, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாலசுப்பிரமணியன்,இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி, பகுதி கழக செயலாளர்கள் சிந்து முருகன், மோகன், திருத்து சின்னதுரை, நெல்லை பகுதி அம்மா பேரவை செயலாளர் சீனி முகம்மது சேட், நெல்லை மேற்கு பகுதி வாகை மணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News