நெல்லை: சரவணா ஸ்டோர்ஸ் ஜவுளி கடையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை
நெல்லையில் உள்ள சரவணா செல்வரத்தினம் ஜவுளிக்கடையில் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை.
வரி ஏய்ப்பு தொடர்பாக நெல்லையில் உள்ள சரவணா செல்வரத்தினம் ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை.
தமிழகம் முழுவதும் சரவணா ஸ்டோர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் இன்று காலையிலிருந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நெல்லையில் வடக்கு பைபாஸ் சாலையில் உள்ள சரவணா செல்வரத்தினம் ஜவுளி கடையில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையால் ஜவுளிக்கடைகள் தங்க நகை கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பல சரக்கு விற்பனை செய்யும் அனைத்தும் விற்பனையை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.