பள்ளி கழிவறை விபத்தில் சிகிச்சை பெறும் மாணவர்களுக்கு மதிமுகவினர் நேரில் ஆறுதல்
பள்ளி கழிவறை சுவர் இடிந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை மதிமுக செயலாளர் நிஜாம் நேரில் சந்தித்து ஆறுதல்.;
நெல்லையில் பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நெல்லை மாவட்ட மதிமுக சார்பில் நேரில் சந்தித்து ஆறுதல்.
நெல்லை மாநகர் உள்ள சாப்டர் மேல்நிலை பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியாகினர். மேலும் நான்கு மாணவர்கள் பலத்த காயமடைந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
மறுமலர்ச்சி திமுக சார்பில் நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ நிஜாம் மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமுற்ற மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அரசு மருத்துவமனை முதல்வரை சந்தித்து மாணவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.