மாவட்ட அளவில் மாணவர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

ப்ரவ்னி ஸ்போர்ட்ஸ் அகாடெமியில் காவலர், இராணுவத்தில் பணிபுரிய ஆர்வமுள்ள மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

Update: 2021-11-15 07:24 GMT

நெல்லை மாவட்ட வில் மற்றும் அம்பு சங்கம் மற்றும் ப்ரவ்னி ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து நடத்தும் மாணவர்களுக்கான இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.

மாவட்ட அளவில் மாணவர்களுக்கு வில் மற்றும் அம்பு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்.

நெல்லை மாவட்ட  வில் மற்றும் அம்பு சங்கம் மற்றும் ப்ரவ்னி ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து நடத்தும் மாணவர்களுக்கான இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம். என்.ஜி.ஓ "ஏ" காலனியில் உள்ள ப்ரவ்னி ஸ்போர்ட்ஸ் அகாடெமியில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு என்.ஜி.ஓ "ஏ" காலனியின் தலைவர் டாக்டர் இளங்கோ தலைமை தாங்கினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை சங்கத்தின் தலைவர் பால் டேனியல், செயல் தலைவர் வென்னிமால்.மு,பொதுச் செயலாளர் நாராயணி, பொருளாளர் பால் தீமோத்தேயு, மற்றும் சங்க உறுப்பினர் ஜோசப் சகாய செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.

இந்த இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் திருநெல்வேலியை சுற்றியுள்ள பல ஊர்களில் இருந்தும் மாணவர்கள் வந்து கலந்து கொண்டனர். இந்த அகடமி ஆனது இனி வரும் நாட்களில் நெல்லை மாவட்டம் மற்றும் அம்பு சங்கம் மற்றும் ப்ரவ்னி ஸ்போர்ட்ஸ் அகாடமி - யின் சார்பில் இலவச யோகா பயிற்சி முகாம் மற்றும் இலவச உடற்பயிற்சி முகம் நடத்தப்படவுள்ளது. இதில் திருநெல்வேலி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையபடி கேட்டுக் கொள்கிறோம்.

ப்ரவ்னி ஸ்போர்ட்ஸ் அகாடெமியில் காவலர் மற்றும் இராணுவத்தில் பணிபுரிய ஆர்வமுள்ள மாணவர்களுக்கு உடற்பயிற்சி வகுப்புக்குள், யோகா மற்றும் வில் விளையாட்டு பயிற்சி அளித்து வருகிறோம். ஒலிம்பிக்கிற்கு வில் விளையாட்டு போட்டியில் திருநெல்வேலியில் இருந்து அதிகப் படியான மாணவர்களை அனுப்பி வைப்பதே அகாடெமியின் நோக்கமாகும்.

Tags:    

Similar News