உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நெல்லையில் மதிமுக சார்பில் உணவு வழங்கல்

காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர் பள்ளியில் உலக மகளிர் தினத்தையொட்டி நெல்லை மதிமுக சார்பில் உணவு வழங்கப்பட்டது.

Update: 2022-03-07 01:16 GMT

காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத பள்ளி நிர்வாகத்தினர் மதிமுக மாவட்டச் செயலாளர் K.M.A. நிஜாம் மற்றும் குடும்பத்தினரை வாழ்த்தி பொன்னாடை அணிவித்தனர்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நெல்லை மத்திய மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வாய் பேச முடியாதோர், காதுகேளாதோர் பள்ளியில் உணவு வழங்கப்பட்டது.

நாடு முழுவதும் வரும் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி நெல்லை மாநகர் குலவணிகர்புரத்தில் அமைந்துள்ள காது கேளாதோர் மற்றும் வாய்பேச முடியதோர் பள்ளியில் நெல்லை மத்திய மாவட்ட மதிமுக செயலாளர் K.M.A. நிஜாம் ஏற்ப்பாட்டில் அசைவ உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் வாய் பேச முடியாதோர் மற்றும் காது கேளாதோர் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் ஏழை, எளிய மக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மதிமுக மத்திய மாவட்டச் செயலாளர் K.M.A.நிஜாம் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரியாணி மற்றும் அறுசுவை உணவுகள் வழங்கினர்.

தொடர்ந்து காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத பள்ளி நிர்வாகத்தினர் மதிமுக மாவட்டச் செயலாளர் K.M.A. நிஜாம் மற்றும் குடும்பத்தினரை வாழ்த்தி பொன்னாடை அணிவித்தனர்.

Tags:    

Similar News