நெல்லையில் காவலர்களுக்கு பணிச்சுமை மன அழுத்தத்தை குறைக்க யோகா பயிற்சி

நெல்லை ஆயுதப்படையில் காவலர்களுக்கு பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2021-06-26 05:06 GMT



திருநெல்வேலி:

நெல்லை ஆயுதப்படையில் காவலர்களுக்கு  பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க  யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

நெல்லையில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உள்ள நிலையில் காவலர்கள் பல்வேறு பகுதிகளில் இரவு பகல் பாராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் காவலர்களுக்கு பணி சுமைகள் அதிகரித்துள்ளது, என்பதை உணர்ந்து காவல்துறை அதிகாரிகள் அவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின்படி, நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவலர்கள்,பெண் காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்கும் விதமாக யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக துணை ஆணையாளர் இராசராசன் உளுந்தங்கஞ்சி வழங்கினார். இதில் ஆயுதப்படை உதவி ஆணையாளர் முத்தரசு, ஆய்வாளர்கள் பேச்சிமுத்து, ராணி, மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News