ஏழை மாணவ, மாணவியர்களுக்கு தீபாவளி புத்தாடைகள்: காவல் துணை ஆணையர் வழங்கல்

நெல்லையில் ஏழை மாணவ- மாணவியரும் தீபாவளி கொண்டாடும் விதத்தில் அலங்கார் சினிமாஸ் சார்பில் புத்தாடைகள் வழங்கப்பட்டன.

Update: 2021-10-29 07:30 GMT

நெல்லையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவியர்க்கு புத்தாடைகள் காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் வழங்கினார்.

நெல்லையில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவ- மாணவியருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கப்பட்டது.

தாய், தந்தையரை இழந்து தவிக்கும் ஏழை மாணவ- மாணவியரும் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடும் விதத்தில் மேலப்பாளையத்தில் அலங்கார சினிமாஸ் ஸ்மார்ட் சிட்டி கிங்ஸ் லயன்ஸ் கிளப் சார்பாக புத்தாடைகள் வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு புத்தாடைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறந்து விளங்கி உயர் பதவிகளை அடைந்து இதுபோன்று சமூகத்திற்கு பல உதவிகளை வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். விழாவில் லயன்ஸ் சங்க முதலாம் நிலை துணை ஆளுநர் விஸ்வநாதன்,வட்டார தலைவர் மணிகண்டன், தலைவர் சங்கர வேலு, நிர்வாகிகள் கணேசமூர்த்தி, சஜி, உடையார், சரவணன், சங்கர், அலங்கார் சினிமாஸ் மேலாளர் மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அலங்கார சினிமாஸ் நடத்துனர் லயன் மணிகண்டன், வாசுதேவன் ஆகியோர் வரவேற்றனர்.

Tags:    

Similar News