நெல்லையில் சித்த மருத்துவ ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு கலந்துரையாடல் கூட்டம்

சித்த மருத்துவ ஓலைச் சுவடிகள் சேகரிப்பு, பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-11-10 05:04 GMT

தென்னக பழங்கால ஓலைச்சுவடிகள் ஆய்வு மையம் சார்பில் சித்த மருத்துவ ஓலைச் சுவடிகள் சேகரிப்பு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

தென்னக பழங்கால ஓலைச்சுவடிகள் ஆய்வு மையம் சார்பில் சித்த மருத்துவ ஓலைச் சுவடிகள் சேகரிப்பு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம்.

தென்னக பழங்கால மருத்துவ ஓலைச் சுவடிகள் ஆய்வு மையத்தின் சார்பில் திருநெல்வேலி மாநகரில் சித்த மருத்துவ ஓலைச் சுவடிகள் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. பாளையங்கோட்டையில் நடைபெற்ற தென்னக பழங்கால ஓலைச்சுவடிகள் ஆய்வு மைய தலைவர் பாப்பான்குளம் டாக்டர்.எஸ்.இராமசாமி தலைமை வகித்து, மருத்துவ ஓலைச்சுவடிகளின் முக்கியத்துவம், அதன் தன்மை, சேகரித்தல், பாதுகாத்தல், நூல் வடிவம் பெறுவதற்கான முயற்சிகள், பதிப்பில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் மற்றும் தீர்வுகள் குறித்து கருத்துரை வழங்கினார். திருநெல்வேலி அரசு சித்த மருத்துவ கல்லூரி உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.ராமசாமி முன்னிலை வகித்தார்.

சுவடியின் சுவடுகள் சிறப்பு அழைப்பாளராக ம.தி.தா. இந்து கல்லூரி மேனாள் தமிழ்த்துறை தலைவர் முனைவர் கட்டளை கைலாசம் "சுவடியின் சுவடுகள்" என்ற தலைப்பின் கீழ் கருத்துரையில் தமிழ் எழுத்துக்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி கிரந்த எழுத்துக்களின் அமைப்பு , சித்தர் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள செய்யுள் அமைப்பு, அதன் இலக்கண வகைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை பேராசிரியர் டாக்டர் டி.ஜே. ஓலைச்சுவடிகளை கணினி மயமாக்குதல் குறித்து விரிவுரையின் போது ஓலைச்சுவடிகளில் உள்ள எழுத்துக்களின் அமைப்பு மற்றும் தோற்றம் முற்றிலும் சிதையாமல் கணினி மயமாக மாற்றும் போது ஏற்படக்கூடிய சிக்கல்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் செயற்கை நுண்ணறிவு முறைகளை பயன்படுத்தி மேம்பட்ட அமைப்புகளை பெறுதல் குறித்தும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் முறைகள் குறித்தும், அதற்கான விளக்கங்களையும் தெளிவாக எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் சித்த மருத்துவ ஆர்வலர்கள், சித்த மருத்துவர்கள், பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டார்கள். ஒவ்வொரு மாதமும் இரு மருத்துவ ஓலைச்சுவடி நூலை கணினி மயமாக்கி அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் பொதுவெளியில் பதிவேற்றம் செய்யுமாறு ஏற்பாடுகள் செய்வதென தீர்மானிக்கப்பட்டது. நிகழ்ச்சிகளை திருநெல்வேலி அரசு சித்த மருத்துவ கல்லூரி விரிவுரையாளர் டாக்டர் ஜி.சுபாஷ் சந்திரன் ஒருங்கிணைத்திருந்தார்.

Tags:    

Similar News