போக்குவரத்து நெரிசலை சரி செய்ய களத்தில் இறங்கிய துணை ஆணையர்
நெல்லை மாநகரில் காவல்துறை துணை ஆணையர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வாகன நெரிசலை சரிசெய்ய களத்தில் இறங்கினார்
நெல்லையில் வரிசையாக நின்ற வாகனங்கள். சாலையில் இறங்கி போக்குவரத்தை காவல்துறை துணை ஆணையர் சரிசெய்தார்.
நெல்லை மாநகரில் வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்ட சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையர் சுரேஷ்குமார் முருகன் குறிச்சி பகுதியில் வாகனங்கள் வரிசையாக நின்றதை பார்த்தார். வரிசையாக வாகனங்கள் தேங்கி நிற்பதை கண்ட காவல் துணை ஆணையர் அதிரடியாக சாலையில் இறங்கி போக்குவரத்தை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.
ரோந்து சென்ற காவல் சட்டம்- ஒழுங்கு துணை ஆணையர் சுரேஷ்குமார் அதிரடியாக தனது காரில் இருந்து இறங்கி போக்குவரத்தை முழுவதுமாக சீர் செய்யும் முயற்சியில் 5 நிமிடங்களில் அப்பகுதியில் போக்குவரத்து முழுவதுமாக சீர் செய்யப்பட்டது. அப்போது ஒரு வழிப் பாதையில் வந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட காரணமாக இருந்த இளைஞர் ஒருவரின் காரை காவல் துணை ஆணையர் தடுத்து நிறுத்தினார்.
அந்த இளைஞர் மன்னிப்பு கோரியதை அடுத்து சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் இல்லையென்றால் மோட்டார் வாகன சட்டப்படி தண்டனை கொடுக்கப்படும் என்று அவரை எச்சரித்து அனுப்பினார்.. மிகுந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் சிரமப்படுவதை அறிந்த காவல் துணை ஆணையர் சாலையில் நின்று முழுவதுமாக போக்குவரத்தை சரி செய்தது வாகன ஓட்டிகள் மற்றும் அந்த வழியே சென்ற பொதுமக்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது..