பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐஎன்டியுசி ஓய்வு பெற்ற நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரசு போக்குவரத்து கழகம் முன்பு ஐஎன்டியுசி ஓய்வு பெற்ற நல சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.;

Update: 2021-11-12 10:40 GMT

வண்ணாரப்பேட்டை அரசு போக்குவரத்து கழகம் முன்பு ஐஎன்டியுசி ஓய்வு பெற்ற நல சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஐஎன்டியுசி ஓய்வு பெற்ற நல சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.

போக்குவரத்து ஓய்வு பெற்ற நல சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வண்ணாரப்பேட்டை அரசு போக்குவரத்து கழகம் முன்பு தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வு பெற்ற நலச்சங்க தலைவர் கந்தையா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 73 மாதம் வழங்கப்படாத அகவிலைப்படியை வழங்கவும், மருத்துவ காப்பீடு முறையை நெறிப்படுத்தவும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும், அரசு போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியராக வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Tags:    

Similar News