நெல்லை-மாவட்டத்தில் 13 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு-அமைச்சர் தகவல்

நெல்லை மாவட்டத்தில் 13 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு வைத்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.;

Update: 2021-06-11 08:34 GMT

அமைச்சர் தங்கம் தென்னரசு

நெல்லை மாவட்டத்தில் 13 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு வைத்துள்ளது என  அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார் .

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் 180 படுக்கை வசதிகள் கொண்ட புதிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோர் இன்று இந்த புதிய சிகிச்சை மையத்தை நேரில் பார்வையிட்டு மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தனர்.

பின்னர் சிகிச்சை மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கை வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் சபாநாயகர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொடர்ந்துஅமைச்சர் தங்கம் தென்னரசு பத்திரிகையாளர்களுகளிடம் பேசும்போது நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 9 கோவிட் சிகிச்சை மையம் மூலம் 2711 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. எல்லா வகையிலும் சமாளிக்க கூடிய நிலை உருவாகியுள்ளது.

மருத்துவர்களின் அர்ப்பணிப்பால் கடுமையாக போராடி தொற்றை குறைத்துள்ளோம். நெல்லையில் ஆக்சிஜன் தேவை அதிகம் இருந்த்து. ஆனால் தற்போது 438 ஆக்சிஜன் செறிவூட்டிகள் தயார் நிலையில் உள்ளன. நெல்லை மாவட்டத்தின் ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டு கூடங்குளம் அரசு மருத்துவமனையில் 720 கியூபிக் மீட்டர் திறனுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு வருகிறது. நெல்லை அருகே சேதுராயன்புதூரில் 2400 கியுபிக் மீட்டர் திறனுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையம் தொடங்கப்பட்டு வருகிறது. மேலும்

கங்கைகொண்டான் சிப்காட் மையத்தில் இயங்காமல் இருந்த ஆக்சிஜன் உற்பத்தி ஆலைக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்து அந்த மையமும் இயங்க அனைத்து ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அந்த நிலையம் இயங்க தொடங்கினால் 1680 கியுபிக் மீட்டர் ஆக்சிஜன் உற்பத்தி நடைபெறும். மொத்தமாக

நெல்லை மாவட்டத்தில் நாளொன்றுக்கு 4800 கியூபிக் மீட்டர் ஆக்சிஜன் மற்றும் 693 சிலிண்டர்கள் உற்பத்தி செய்யும் சூழல் இம்மாதம் இறுதிக்கள் ஏற்படும். அடுத்த கோவிட் அலையை சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளும் நெல்லை மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ளது. மேலும் நெல்லை மாவட்டத்தில் 13 லட்சத்து 19 ஆயிரத்து 234 பேர் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் என கண்டறிந்துள்ளோம். இதில் 1,54500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி கேட்டு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. ஆதிச்சநல்லூரில் அரசு அறிவித்த சர்வதேச தரத்துடன் கூடிய அருங்காட்சியகம் பற்றி கேட்ட கேள்விக்கு, அறிவிப்புகளாக மட்டுமே இருந்து விடகூடாது என்பது தான் எங்களது கொள்கை ஆதிச்சநல்லூர் வாழ்ந்த மக்கள் குறித்த ஆய்வறிக்கை வராமல் இருக்கிறது. உடனடியாக ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்வு அறிக்கை மத்திய அரசு விரைவில் வெளியிட வேண்டும். மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் அறிவித்த அருங்காட்சியகத்தை உடனடியாக ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

Tags:    

Similar News