நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கொரோனா விழிப்புணர்வு பன்னாட்டு கருத்தரங்கம்

அரசின் வழிகாட்டுதல்களை கடைபிடித்தால் கொரோனாவை கட்டுப்படுத்திவிடலாம். பன்னாட்டுக் கருத்தரங்கில் மருத்துவர்கள் ஆலோசனை.;

Update: 2021-08-06 08:40 GMT

அரசின் வழிகாட்டுதலை கடைபிடித்தால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் பன்னாட்டுக் கருத்தரங்கில் மருத்துவர் பிரேமச்சந்திரன் உரை.

நெல்லை அரசு அருங்காட்சியகம், கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை,நெல்லை பொதிகைத் தமிழ் அறக்கட்டளை இணைந்து இணையவழியில் நடந்த கொரோனா விழிப்புணர்வு பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி இந்த நிகழ்ச்சி இணையவழியில் நடத்தப்பட்டது.

இப்பன்னாட்டு கருத்தரங்கிற்கு பொதிகைத் தமிழ் அறக்கட்டளை நிறுவனர் கவிஞர்.பேரா வரவேற்புரை வழங்கினார். அரசு அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தலைமையுரை வழங்கினார். கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை நிறுவனர் முகமது முகைதீன் துபாயிலிருந்து தொடக்கவுரை ஆற்றினார்.

மேலப்பாளையம் செல்வன் மருத்துவமனை மருத்துவர் பிரேமச் சந்திரன் சிறப்புரை ஆற்றினார்.

அவர் பேசுகையில்:- கொரோனா வைரஸின் உற்பத்தி அதன் தன்மைகளை ஒவ்வொருவரும் தெரிந்து கொண்டால் தான் அரசு சொல்கிற வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டிய அவசியம் பற்றி நமக்குத் தெரியும். முகக் கவசம் அணிய வேண்டியதன் அவசியம், சமூக இடைவெளி காக்க வேண்டியதன் அவசியம் மற்றும் கைகளை அடிக்கடி கை கழுவ வேண்டியதன் முக்கியத்துவத்தையும் நாம் முழுமையாக தெரிந்து கொண்டால் தான் அரசு சொல்கிற இந்த வழிகாட்டுதல்களை கடைபிடிப்போம். அரசின் வழிகாட்டுதல்களைக் கடைபிடித்தாலே கொரோனாவை கட்டுப்படுத்தி விடலாம் என்று கூறினார்.

இதனை தொடர்ந்து நெல்லை டவுண் மருத்துவர் சாரதா செயல்விளக்க ஒலி, ஒளியுடன் விளக்கவுரை வழங்கினார். நிறைவாக அபுதாபியிலிருந்து கவிஞர் கீதா ஸ்ரீராம் பேசினார். கலையாசிரியர் சொர்ணம் நன்றி கூறினார். அதனையடுத்து கங்கைகொண்டான் பகுதியைச் சுற்றியுள்ள பள்ளி மாணவ, மாணவிகளின் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Tags:    

Similar News