பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு தேர் பவனி

தூய சவேரியார் பேராலயத்தின் திருவிழா கடந்த 24 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தேர் பவனி நடைபெற்றது.

Update: 2021-12-03 01:06 GMT

பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு சவேரியார் தேர் பவனி நடைபெற்றது.

நெல்லை பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு சவேரியார் தேர் பவனி நடைபெற்றது. திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

நெல்லை பாளையங்கோட்டை தெற்கு பஜார் பகுதியில் அமைந்துள்ள பழமையான தூய சவேரியார் பேராலயத்தின் திருவிழா கடந்த 24 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.9 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் காலையில் சிறப்பு திருப்பலியும், மாலையில் மறையுறையும் நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தூய சவேரியாரின் தேர் பவனி இன்று நடைபெற்றது. முன்னதாக பேராலயத்தில் திருவிழா திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிரிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். . சப்பரபவணியின் போது திரளான கிறிஸ்தவர்கள் இறை பாடலை பாடியபடி உடன் வந்தனா். புனித சவேரியார் தேர் பாளையங்கோட்டை தெற்கு பஜார் நான்கு ரத வீதிகள் வழியாக மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தது.

சப்பரபவணியின் போது குழந்தைகளை சவேரியார் முன்பு வைத்தும் மாலைகள் சமா்பித்தும் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து 3ம் தேதி காலை பேராயாின் சிறப்பு திருப்பலியுடன் புதுனன்மை விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.


Tags:    

Similar News