நெல்லை மாவட்ட மைய நூலகத்தில் புத்தக கண்காட்சி: எம்எல்ஏ துவக்கி வைப்பு
மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் 54 வது தேசிய நூலக வார தொடக்க நிகழ்வு மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை, மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் 54 வது தேசிய நூலக வார தொடக்க நிகழ்வு மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.
நிகழ்விற்கு வாசகர் வட்டத் தலைவர் அ. மரியசூசை தலைமை தாங்கினார். வந்திருந்தவர்களை வாசகர் வட்டத் துணைத் தலைவர் முனைவர் கோ. கணபதி சுப்பிரமணியன் வரவேற்றார். நிகழ்விற்கு மாவட்ட நூலகஅலுவலர் லெ. மீனாட்சிசுந்தரம், மைய நூலகர். இரா . வயலட், நூலக கண்காணிப்பாளர் மு.சங்கரன் , நூலக ஆய்வாளர்.எம். கணேசன், வாசகர் வட்ட ஆலோசகர் முனைவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் கலந்து கொண்டு நூலக கண்காட்சியை திறந்து வைத்து வாசகர் வட்டத்தின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். குறிப்பாக மாவட்ட மைய நூலக கலை அரங்கத்திற்கு குளிர்சாதன வசதி உடனடியாக செய்து தரப்படும் என்று அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சிவராம் கலைக்கூடம் மற்றும் ஐ பவுண்டேசன் சார்பில் கண்தான விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ செல்வங்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். ரூபாய் 10 ஆயிரம் கொடுத்து நூலக கொடையாளராக சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப் தன்னை இணைத்துக் கொண்டார். தன்னம்பிக்கை உரையை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன், எழுத்தாளர் நாறும்பூநாதன் ஆகியோர் வழங்கினர். புஷ்பலதா பள்ளி மாணவி சூடாமணி கண் தானம் குறித்து உரையாற்றினார்.
நிகழ்வில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் அமிதாப், பகுதி செயலாளர் செல்லதுரை, வல்லநாடு எம்.முத்து அபே மணி, ஆப்டிகல் பாலா மற்றும் ஐ பவுண்டேஷன் டைரக்டர் டாக்டர் முகமது பைசல், சிவராம் கலைக்கூட இயக்குநர் கணேசன், நியூ செஞ்சுரி புத்தக நிலைய மேலாளர் மகேந்திரன். எழுத்தாளர் திவான், மற்றும் வாசகர் வட்டத்தை சார்ந்த சிற்பி பாமா, அருணா சிவாஜி, தேசிய வாசிப்பு இயக்கம் தலைவர் தம்பான், நூலகர்கள் மகாலட்சுமி, மாரியப்பன், சீனிவாசன், வனராஜ், அகிலன் முத்துக்குமார். சக்திவேல் ஜெயமங்கலம் நூலக பணியாளர்கள் வேலம்மாள் பாலமுருகன் சுடலைமுத்து சுப்பையா, உமாமகேஸ்வரி, மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக நூலகர் கண்ணுப்பிள்ளை நன்றி கூறினார்.