திருநெல்வேலி மாவட்ட மைய நூலகத்தில் புத்தக கண்காட்சி
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில் மாவட்ட மைய நூலகத்தில் புத்தக கண்காட்சி நடைபெற்றது.;
நெல்லை மாவட்ட மைய நூலகத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்றது.
நெல்லை மாவட்ட மைய நூலகத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்றது.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மற்றும் விக்கிரமசிங்கபுரம் அரசு கிளை நூலகம் இணைந்து புத்தக கண்காட்சி நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் வாசகர் வட்ட துணைத் தலைவர் மற்றும் சங்கர் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் கவிஞர் முனைவர். கோ.கணபதி சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக வருகை தந்து புத்தகம் வாசிப்பும், அதன் பயன்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பொதியை வாசகர் வட்ட துணைத் தலைவர் மைதீன் பிச்சை வரவேற்புரை ஆற்றினார். பொதிகை வாசகர் வட்ட நிர்வாகிகள் கழுகுமலை புத்தக ஆர்வலர் முருகேசன் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நூலகர் குமார் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் கண்ணன் மற்றும் நியூ செஞ்சுரி புத்தக விற்பனையாளர் சுபாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.