பாபர் மசூதி இடிப்பு தினம்: எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
டிசம்பர்.6 பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி மேலப்பாளையத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு. எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
ஆண்டு தோறும் டிசம்பர் 6ம் தேதி பாபர் இடிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் பஜார் திடல், குறிச்சி, மேலப்பாளையம் சந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 500 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலப்பாளையம் பகுதி முழுவதுமே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நெல்லை மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில் மேலப்பாளையத்தில் பாபர் மசூதி இடிப்பை கண்டித்து 500க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பாளையங்கோட்டை தொகுதி சார்பாக ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில பொது செயலாளர் அ.ச.உமர் பாருக் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.