நெல்லை போலீசார் சார்பில் விடுதியில் தங்கி பணிபுரியும் பெண்களுக்கு விழிப்புணர்வு
நெல்லையில் விடுதியில் தங்கி பணிபுரியும் பெண்களுக்கு, விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாகர போலீசார் நடத்தினர்.
திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணன் உத்தரவின்பேரில், நெல்லை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை கமிஷனர் சுரேஷ்குமார் மேற்பார்வையில், மாகரம் முழுவதும் பெண்கள் விழிப்புணர்வு நிகழ்சிச்சி நடைபெற்றது.
நெல்லை மாநகரகூடுதல் காவல் துணை கமிஷனர் சங்கர் தலைமையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதை தடுப்பது பற்றியும், குற்றங்கள் நடந்தால் செயல்பட வேண்டிய நடவடிக்கைள் பற்றியும், ஆங்காங்கே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
காவல் துறையை 24 மணி நேரமும் அணுக (காவலன் SOS) செயலியின் நன்மைகள் குறித்தும், (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உதவி எண் : 1098,181) மாநகரம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பாளையங்கோட்டையில் உள்ள ( YWCA தனியார் பெண்கள் காப்பகத்தில்) அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர் நிகழ்ச்சி நடைபெற்றது.
காவல் ஆய்வாளர் அன்னலட்சுமி, பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் .ஜென்சி, உதவி ஆய்வாளர் வள்ளி மற்றும் காப்பகத்தின் துணை முதல்வர் தீணா மஸ்தாடு ஆகியோர் இணைந்து காப்பகத்தில் தங்கி பணிபுரியும் பெண் ஊழியர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.