கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள்: நெல்லையில் அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு

கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் தலைமையில் அரசு அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர்.

Update: 2022-05-20 11:57 GMT

கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் தலைமையில் அரசு அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர்.

கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் தலைமையில் அரசு அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் வளாகத்தில், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளை முன்னிட்டு உறுதிமொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் வாசிக்க அனைத்து அரசு அலுவலர்கள் இன்று (20.05.2022) எடுத்துக் கொண்டனர். ஒவ்வொரு வருடமும் மே மாதம் 21ஆம் நாள் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளை முன்னிட்டு அரசு அலுவலகங்களிலும் 20.05.2022 இன்று கொடுஞ்செயல் உறுதிமொழி எடுக்கப்படுகிறது.

அதன்படி அகிம்சை, சகிப்புதன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம், எவ்வகையான கொடுஞ்செயல்களையும், வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம். எல்லா மக்களிடத்தும், அமைதி. சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றைப் போற்றி வளர்க்கவும். மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறு விளைவிக்கும் பிரிவனைச் சக்திகளை எதிர்த்து போராடவும், நாம் உறுதி கூறுகிறோம். என்ற உறுதிமொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் வாசிக்க அனைத்து அரசு அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எம்.கணேஷ்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் குமாரதாஸ், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் திரு.தியாகராஜன், ஆய்வு குழு அலுவலர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் வெங்கடாச்சலம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News