பாளையங்கோட்டையில் தியாகி விஸ்வநாததாஸ் 81வது நினைவு நாள் அனுசரிப்பு
சுதந்திர போராட்ட தியாகி எஸ்.எஸ். விஸ்வநாததாஸ் 81வது நினைவு நாள் முன்னிட்டு எம்எல்ஏ அப்துல் வகாப் மாலை அணிவித்து மரியாதை.
நெல்லையில் சுதந்திர போராட்ட தியாகி எஸ்.எஸ். விஸ்வநாததாஸ் 81வது நினைவு நாள் நிகழ்வு.
சுதந்திர போராட்ட வேள்வியால் 29 முறை சிறை சென்ற தியாகி எஸ்.எஸ். விஸ்வநாததாஸ் 81 வது நினைவுநாள் நிகழ்வு பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
நினைவு நாள் நிகழ்ச்சியில் திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலாளரும், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான மு.அப்துல் வகாப் கலந்துகொண்டு தியாகி விஸ்வநாத தாஸ் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிகழ்வுக்கு ஜெயமணி தலைமை வகித்தார். திமுக கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் செல்வ சூடாமணி வரவேற்புரையாற்றினார். தலைவர் இளைஞர் காங்கிரஸ் ராஜீவ்காந்தி, 24 வது வட்ட திமுக செயலாளர் மணி, ஆவின் கல்யாணசுந்தரம், கவிஞர் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேசிய நல்லாசிரியர் முனைவர் செல்லப்பா அறிமுக உரையாற்றினார். விஸ்வநாததாஸ் தேசியப் பேரவை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் முத்துராஜ், டீம் அசோசியேட் பொருளாளர் எஸ்.மாணிக்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.