நெல்லையில் 54வது தேசிய நூலக வார நிறைவு விழா: ஆட்சியர் பங்கேற்பு
திருநெல்வேலி மாவட்டம் 54வது தேசிய நூலக வார நிறைவு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட மைய நூலகத்தில் 54வது தேசிய நூலக வார நிறைவு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பொருநை நதியின் நாகரீகம் தொடர்பான கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, மற்றும் ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற 9 மாணவ- மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், நூலக கட்டடத்திற்கு ரூ.20 இலட்சம் நிதி ஒதுக்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிலா சத்தியானந்த்க்கு நினைவு பரிசுகளையும், நூலகத்திற்கு பல்வேறு சேவை ஆற்றிய தமிறிஞர்கள் மற்றும் நூலகர்கள் என 15 அறிஞர் பெருமக்களுக்கு நினைவுப்பரிசுகளையும், நூலகத்திற்கு 100 நபர்களுக்கான உறுப்பினர் காப்புத்தொகை வழங்கியமைக்கான பாராட்டு சான்றிதழ்களையும், கலை நிகழச்சிகளை ஏற்பாடு செய்த மாணவர்களுக்கு நினைவு பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு பேசியதாவது:- திருநெல்வேலி மாவட்ட மைய நூலகம் 1952 ஆம் ஆண்டு முதல் தொடங்கி சிறப்பாக இயங்கி வருகிறது. இந்த நூலகத்தில் நூல்கள் பிரிவு, நூல்கள் ஆலோசனை பிரிவு, பத்திரிக்கை பிரிவு, குழந்தைகள் பிரிவு மற்றும் கணினி பிரிவுகள் இயங்கி வருகிறது. அரசு வேலை வாய்ப்பு மற்றும் நுழைவு தேர்வுகளுக்கான போட்டித்தேர்வு , நூல்கள் மற்றும் பருவ இதழ்கள் கொண்ட குறிப்புதவி பிரிவு காலை 8.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை செயல்ப்பட்டு வருகிறது. இது போன்ற பல்வேறு விதமாக பயிற்சிகள் மற்றும் திறமைகளை வளர்த்து கொள்ள இந்த மாவட்ட மைய நூலகம் சிறப்பாக விளங்கி வருகிறது.
பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வாசிக்கும் திறனை அதிகப்படுத்த வேண்டும். அதற்கு சிறிய அளவிலான சிறந்த புத்தகங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வழங்க வேண்டும். பள்ளி புத்தகங்கள் மட்டுமல்லாமல் மாணவர்களின் சிந்தனைகளை ஊக்கப்படுத்துவதற்கான புத்தகங்களை தேர்வு செய்து வழங்க வேண்டும். அதன் மூலம் சிறு வயதிலே வாசிக்கும் திறனை எளிதாக ஏற்படுத்த முடியும். என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தெரிவித்தார். முன்னதாக திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லை நீர்வளம் என்ற தலைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த புகைப்பட கண்காட்சியினை பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, துணை ஆட்சியர் பயிற்சி செல்வி மகாலெட்சுமி, இலங்கை தமிழர் மறுவாழ்வு மைய வட்டாட்சியர் செல்வன், மாவட்ட மைய நூலகர் லெ.மீனாட்சி சுந்தரம், வாசகர் வட்ட தலைவர் மரியசூசை, துணைத்தலைவர் கணபதி சுப்பிரமணியன், முதுநிலை நூலகர் வயலட், நல் நூலகர் முத்துகிருஷ்ணன், காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி மையன் ரமேஷ், ஏட்ரி மதிவானன், கவிஞர் பே.ரா, நம் தாமிரபரனி நல்லபெருமாள், மைய நூலக அலுவலர்கள் சங்கரன், கணேசன், சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் கொண்டனர்.