தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) சேர்க்கை அறிவிப்பு
அரசு ஐ.டி.ஐ.-ல் படிக்கும் மாணவா்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுப்பணி, முன்னணி அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் அதிக வேலை வாய்ப்பு உள்ளது.;
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) சேர்க்கை குறித்து நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்..
அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் தொழிற் பயிற்சி மையங்;களில் அரசு ஓதுக்கீட்டு இடங்களில் இந்த ஆண்டிற்கான (2021) மாணவர் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை 01-07-2021 முதல் 10 ம் வகுப்பு மற்றும் 8 ம் வகுப்பு படித்து தோ்ச்சி பெற்றவா்கள் இணையதளம் மூலம் (online) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி www.skilltraining.tn.gov.in விண்ணப்பிக்க கடைசி நாள் 28-07-2021 ஆகும்
மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க தங்கள் இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள Computer Centre மூலம் விண்ணப்பிக்கலாம். முடியாதவா்கள் அரசு தொழிற் பயிற்சி நிலையம் பேட்டை, அம்பாசமுத்திரம் மற்றும் இராதாபுரம், DSTO அலுவலகம் பேட்டை, , ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஐ.டி.ஐ. சோ்க்கை உதவி மையங்களை (IAFCS) 8 ம் வகுப்பு,,10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தற்போது ஆல் பாஸ் மாணவா்கள் 9 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) ஜாதி சான்றிதழ், ஆதார்அட்டை, பாஸ்போ்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் அணுகி விண்ணப்பிக்கலாம்.
இந்த இணையதளத்தில் விண்ணப்பிப்பதின் மூலம், தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு தொழிற்பயிற்சி நிலையத்திலும் சோ்க்கை பெறலாம். தமிழகத்தில் உள்ள தொழிற் பயிற்சி நிலையங்களின் விபரங்கள், தொழிற் பிரிவுகள். தேவையான கல்விதகுதி, வயதுவரம்பு, இடஒதுக்கீடு ஆகியன இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் (PROSPECTUS) கொடுக்கப்பட்டுள்ளது.
அரசு ஐ.டி.ஐ-ல் பயிலும் மாணவா்கள் அனைவருக்கும் எந்த பாகுபாடு இன்றி மாதம் ரூ.750 - வீதம் கல்வி உதவி தொகை வழங்கப்படும். மேலும் தற்போதைய விதிகளின் படி, பயிற்சியின் போது LAPTOP, மிதிவண்டி (CYCLE), வருடத்திற்கு இரண்டு சீருடைகள், ஒரு ஜோடி காலணி, NIMI பாட புத்தகங்கள், வரைபட கருவிகள் ஆகியவைகள் விலையில்லாமல் வழங்கப்படும். மாணவா்கள் பயிற்சி நிலையத்திற்கு வந்து செல்ல இலவச பஸ் பாஸ் மற்றும் சலுகை கட்டணத்தில் ரயில் பாஸ் வழங்கப்படும்.
அரசு ஐ.டி.ஐ.-ல் படிக்கும் மாணவா்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுப்பணி, முன்னணி அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் அதிக வேலை வாய்ப்பு உள்ளது. இளைஞா்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி நல்ல வேலை வாய்ப்பினை பெற்று தங்களது வாழ்க்கையை நன்றாக அமைத்து கொள்ள நெல்லை மாவட்ட நிர்வாகத்தால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.