நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது

Update: 2021-06-11 09:39 GMT

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில்-ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் மற்றும் இராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரிமுதுகலை வரலாற்றுத்துறை மற்றும் ஆராய்ச்சி மையம்,அஇணைந்து நடத்தும்

ஏழு நாள் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி , அருங்காட்சியகமும் அரும்பணிகளும் என்னும் தலைப்பில் துவங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் துவக்கமாக பேராசிரியர் கந்தசாமி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர். ஜெகன்நாத் தலைமையுரை ஆற்றினார். நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி முன்னிலை வகித்தார். வரலாற்று துறை தலைவர் முதுமுனைவர். வெங்கட்ராமன் நிகழ்வின் நோக்க உரை ஆற்றினார்.


பேராசிரியர். முனைவர் வெங்கடேஸ்வரன் வாழ்த்துரை வழங்கினார். இன்றைய நிகழ்வில் சிறப்பு உரையாக இந்திய நாணயவியல் எனும் தலைப்பில் சென்னை அரசு அருங்காட்சியகத்தின் நாணயவியல் பிரிவு காப்பாட்சியர் சுந்தர்ராஜன் சிறப்புரை ஆற்றினார்.அவரது உரையில் நாணயங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சியை பற்றியும் இந்தியாவில் பல்வேறு மன்னர்களின் காலங்களில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் பற்றியும் விரிவாக விளக்க உரையாற்றினார்.இந்த ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வு நெல்லை அரசு அருங்காட்சியகத்தின் யூட்யூப் சேனல் Nellai Museum இல் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் பேராசிரியர் ராம்ஜி நன்றியுரை வழங்கினார்.

Similar News