நெல்லை-நடமாடும் கலைஞர் உணவகத்தை எம்எல்ஏ அப்துல் வகாப் துவக்கி வைத்தார்.

Update: 2021-06-09 09:32 GMT

நடமாடும் கலைஞர் உணவகம்.எம்எல்ஏ அப்துல் வகாப் துவக்கி வைத்தார்.

பசியில்லா நெல்லை மாநகர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு நடமாடும் கலைஞர் உணவகம் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் தொடங்கி வைத்தார்.

முன்னாள் முதல்வர் கலைஞரின் 98வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டம் மாநகர் பகுதியில் பசியில்லா நெல்லை மாநகர் என்ற நடமாடும் கலைஞர்கள் உணவகம் தொடக்க விழா நிகழ்ச்சி இன்று பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் வைத்து நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியை தகவல் தொழில் நுட்ப அணி மாவட்டத் துணை ஒருங்கிணைப்பாளர் பலராமன் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பசியால் வாடும் ஏழைகளுக்கு உணவு வழங்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அப்போது அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இது குறித்து அப்துல் வகாப் தெரிவிக்கும் பொழுது கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று தொடங்கி இந்த மாதம் இறுதி வரை இந்த நிகழ்ச்சி நடை பெறுவதாகவும், பசியில்லா நெல்லை மாநகர் என்ற தாரக மந்திரத்தை கொண்டு காலையில் தொடங்கி இரவு 11 மணிவரை மாநகரப் பகுதியில் எங்கெல்லாம் பசியால் மக்கள் வாடுகின்றார்களோ அங்கு வாகனத்தில் சென்று உணவு வழங்கப்பட உள்ளதாகவும், தேவை என்றால் உடனடியாக உணவு தயார் செய்து கொடுக்கப்பட உள்ளதாகவும், அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகி மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Similar News