அரசு மருத்துவமனைக்கு நிவாரண மருந்து பொருட்களை திருநெல்வேலி எம்எல்ஏ வழங்கினார்.
நெல்லை அரசு மருத்துவமனைக்கு 5 லட்சம் மதிப்பிலான நிவாரண மருத்துவ பொருட்களை எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் வழங்கினார்.
கொரோனா பேரிடர் நெருக்கடியான காலகட்டத்தில் தமிழக அரசு முடிந்த அளவு சிறப்பாக செயல்படுவதாக பாஜக சட்டமன்ற குழு தலைவரும் மாநிலத் துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 5 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரண பொருட்களை தனியார் நிறுவனம் வழங்க முன்வந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரனிடம் மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.
அப்போது நெருக்கடியான இந்த காலகட்டத்தில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார். தமிழக அரசு முடிந்த அளவு சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்தார்.