நெல்லை -அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் திரண்டனர்.

Update: 2021-06-07 11:04 GMT

பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை

நெல்லை மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் தற்போது தடுப்பூசி செலுத்த அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் திரண்டனர்.

தமிழகத்தில் கடந்த இரண்டு தினங்களாக கொரனோ தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டது. அந்தவகையில் நெல்லை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 84 தடுப்பூசி மையங்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனைத்து மையங்களிலும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு நெல்லை மாவட்டத்திற்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மட்டும் 1000 தடுப்பூசிகளை அனுப்பி வைத்துள்ளது. மற்ற மையங்கள் பூட்டப்பட்ட நிலையில் அரசு மருத்துமனையில் மிக குறைந்த அளவே தடுப்பூசி அனுப்பப்பட்டதால் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இன்று ஊரடங்கு தளர்வால் பொதுமக்கள் அதிகளவில் தடுப்பூசி போடுவதற்காக திரண்டனர்.

Similar News