திருநெல்வேலியில் ஊரடங்கு உத்தரவு ஒருவாரம் நீட்டிப்பு :மாநகர போலீசார் அறிவிப்பு
அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு ஒருவாரம் நீட்டிப்பு
ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள்-07.06.2021 முதல் அனுமதிக்கப்படும் செயல்பாடுகள்-அனுமதிக்கப்படாத செயல்பாடுகள்
ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் 07.06.2021 முதல் அனுமதிக்கப்படும் செயல்பாடுகள்
கீழ்க்கண்ட கடைகள் மற்றும் வியாபாரங்கள் காலை 06.00 மணி முதல் மாலை
05.00 மணிவரை அனுமதிக்கப்பட்டுள்ளது.
தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட அனுமதிக்கபடும்.
காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட அனுமதிக்கபடும்.
மின் பணியாளர்(Electricians), பிளம்பர்கள்(Plumbers), கணிணி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர்கள் (Motor Technicians), மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் இ-பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
மின்பொருட்கள் (Electrical Goods) , பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும் மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் கடைகள் மட்டும் (விற்பனை நிலையங்கள் அல்ல) செயல்பட அனுமதிக்கப்படும்.
ஹார்டுவேர் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும் கல்வி புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும்.
வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும்.
வாகன விநியோகிப்பாளர்களின் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் மட்டும் (விற்பனை நிலையங்கள் அல்ல) செயல்பட அனுமதிக்கப்படும்.
மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
அனுமதிக்கப்படாத செயல்பாடுகள்
Ø இருசக்கர வாகனங்களில் பணியாளர்கள் பணிக்கு சென்றுவர 25.05.2021 முதல் அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆகவே, தொழிற்சாலைகள் தங்கள்பணியாளர்களை பணிக்கு அழைத்து வர நான்கு சக்கர வாகனங்களை (Buses, Vans,Tempos and Cars ) ஏற்பாடு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இ-பதிவு புதுப்பிக்கப்பட வேண்டும்.
Ø இந்த நான்கு சக்கர வாகனங்களை https://eregister.tnega.org வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். E-Registrationசெய்து அதனடிப்படையில் வழங்கப்பட்ட பாஸ்களின் அடிப்படையில் காவல்துறையினர் இவ்வாகனங்களை அனுமதிப்பர் என நெல்லை மாநகர காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது