மாஸ்டர் 50வது நாள் 50 பேருக்கு மேல் இரத்ததானம்
நடிகர் விஜய் நடித்து வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தின் 50வது நாள் விழாவை முன்னிட்டு, இரத்ததான முகாம் நடைப்பெற்றது.;
நடிகர் விஜய் நடித்து வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தின் 50வது நாள் விழாவை முன்னிட்டு இரத்ததான முகாம்.
நடிகர் விஜய் நடித்து வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தின் 50வது நாளை முன்னிட்டு நெல்லை ராம் சினிமாஸ் திரையரங்கில் மேளதாளத்துடன் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து ரத்ததான முகாம் நடைபெற்றது. ராம் சினிமாஸின் மேலாளர் முத்துராஜ் அனைவரையும் வரவேற்றார். நெல்லை மாவட்ட தொண்டரணி தலைவர் ஜாஹிர் உசேன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். இம்முகாமினை ராம் சினிமாஸின் உரிமையாளர் ராமசாமி ராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திரளாக மக்கள் இயக்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.